Sunday, 17 September 2017

CPS ரத்து செய்யும் அறப்போரில் *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு* (TNGTF)

📌 CPS ரத்து செய்யும் அறப்போரில்
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு* (TNGTF)
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
📌 TNGTF தனது பத்தாண்டுகள் பயணத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காகவும், தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக

அறிவிக்க கோரியும் பல அற போராட்டங்களை தனித்து நடத்தி வந்தாலும்,

📌 *புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி மாநில அளவில் திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், திருச்சி போன்ற மாநகரங்களில் உண்ணாவிரதம் அறப்போராட்டத்தை நடத்தி CPS குறித்து அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.*

    📌அதன் பின் ஜாக்டோவுடன் இணைந்து CPS ரத்து செய்யும் கோரிக்கையை இரண்டாவது கோரிக்கையாக இடம் பெற செய்து அறப்போராட்டங்களில் பங்கேற்றது.

📌 சாந்தாசீலா நாயர் தலைமையிலான CPS வல்லுநர் குழுவை தனியாக சந்தித்து CPS ரத்து செய்யவதற்கான காரணத்தினை தெளிவாக எடுத்துரைத்தது.

📌 காலத்தின் மாற்றம் காரணமாக ஜெ அவர்களின் மறைவு வல்லுநர் குழுவின் கால நீட்டிப்பு , குழு உறுப்பினர்கள் ராஜினாமாவின் காரணமாக Cps ரத்து  கோரிக்கையை முதல் கோரிக்கையாக கொண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பு உருவாக அதனுடன் இணைந்து அறப்போராட்டத்தில் பங்கேற்றது.

📌 தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பில் சிக்கல் வந்தாலும் CPS ரத்து கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட முடிவுசெய்த ஜாக்டோ ஜியோவுடன் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு கொண்டது.

📌தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
தனது பத்தாண்டுகள் பயணத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய நீண்ட யுத்தத்தினை நடத்தி வருகிறது என்று கூறுவதில் பெருமை கொள்வோம்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இவன்
ரா.ஜெயக்குமார், 
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு. திருப்பூர்.
🌼🌼🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment